மரணத்தில் நிம்மதி வேண்டுமா அப்போ இவருடைய புகைப்படத்தை வைத்துக்கொள்ளுங்கள்
மரணம் அடைந்த பிறகு ஒரு மனிதனுக்கு கஷ்டமில்லை. ஆனால் மரணத்திற்கு முன்னால் அவன் எதிர் கொள்ளக்கூடிய கஷ்டங்கள் ஏராளம்.
மரணத்தை நெருங்கும் போது அவன் படும் கஷ்டம் ஏராளம். அதுவும் இந்த கலியுகத்தில் ஒரு மனிதனுக்கு இறப்பு என்பது எந்த ரூபத்தில் எப்போது வருகின்றது என்று தெரியாது.
மரணத்தின் காரணம் திடீரென்று விபத்து சொல்ல முடியாத அளவுக்கு காயங்கள் பட்டு உயிரை விடும் சூழ்நிலை.
உடல்நிலை சரியில்லாமல் உயிரை விடும் சூழ்நிலை போன்ற பல காரணங்களால் பலர் இறக்கின்றனர்.
எந்த சூழ்நிலையிலும் மரணம் சம்பவிக்கும் போது நாம் எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது.
நம்முடைய மரணம் கூட நமக்கு சுகத்தை தர வேண்டும்.
அந்த சமயத்தில் கூட நமக்கு இன்னல்கள் வரக்கூடாது என்றால் எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும்.
மரணத்திலும் கஷ்டம் வராமல் இருக்க
குறிப்பாக அடிக்கடி வெளியூருக்கு செல்பவர்கள், வண்டி ஓட்டிக்கொண்டே இருப்பவர்கள் எனும் பட்சத்தில் இது மிகவும் கை கொடுக்கும் பரிகாரமாக இருக்கும்.
ஒருவருடைய உயிருக்கு பெரிய அளவில் திடீரென எந்த ஆபத்து வரக்கூடாது என்றால் உங்களுடைய பக்கத்திலேயே பைரவரின் திருவுருவப்படத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
பைரவரின் எந்த ரூபம் பிடித்திருக்கின்றதோ அதன் சிறிய வடிவிலான புகைப்படங்களை நம்முடன் வைத்து கொள்ள வேண்டும்.
பெண்கள் ஆண்கள் ஆகிய இரு பாலருமே பைரவரின் புகைப்படங்களை வைத்து கொள்ளலாம்.
அது மட்டும் அன்றி பாடசாலை செல்லும் மாணவர்களின் பையில் பைரவரின் புகைப்படங்களை வைப்பதனால் அவர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கும்.
சிவபெருமானின் 66 அவதாரங்களில் இந்த கால பைரவரும் ஒருவர். காலத்தால் எந்த ஒரு ஆபத்தும் நம்மை கலங்கடிக்காது.
காலத்தின் கடவுள் இவர்தான். ஆணவத்தையும், அகங்காரத்தையும் அழிப்பதற்காக சிவபெருமான் காலபைரவர், அவதாரத்தை எடுத்த நாள் தான் காலபைரவ அஷ்டமி என சொல்லப்படுகின்றது. 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் இவருக்குள் அடங்கும்.
பாதுகாப்பான கடவுள்
இந்த உலகத்தில் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றால் பாதுகாக்க கூடிய வேலையை இந்த பைரவரால் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.
இது அல்லாமல் எப்போதெல்லாம் முடிகின்றதோ அப்போதெல்லாம் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு இந்த பைரவரையும் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
"பைரவா பைரவா" என்று மனதில் நினைத்துக் கொண்டால் மன பயம் நீங்கும்.
எதிரி தொல்லையும் இருக்காது. எல்லா பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றி விடக் கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் இந்த கால பைரவர்.