கந்த சஷ்டி கவசத்தை இப்படி படித்தால் இவ்வளவு நன்மையா!
இன்று நம்முடைய வீட்டில் இருப்பவர்கள் மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்களா, என்று கேட்டால் நிச்சயம் கிடையாது.
மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுகிறோமோ இல்லையோ, மூன்று வேளை தவறாமல் மருந்து மாத்திரை சாப்பிடுகின்றோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த வார்த்தையின் அர்த்தமே இப்போதுதான் புரிகிறது.
காசு பணம் இருக்குதோ இல்லையோ, இந்த நோய் நொடி இல்லாமல் மருந்து மாத்திரை இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்யலாம்.
சில பேருக்கு பரம்பரை பரம்பரையாக சில நோய் வரும். அப்படி பரம்பரை பரம்பரையாக கர்மாவின் மூலம் தொடந்து வரும் நோய்களை குணப்படுத்தவும் இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும். முருகப்பெருமானை வேண்டி தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம்.
தீராத நோய் தீர முருகர் பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும் பரங்கிக்காய் தேவை. இதை மஞ்சள் பூசணிக்காய் என்றும் சொல்லுவார்கள். திருஷ்டிக்கு சுத்தும் பூசணிக்காய் கிடையாது இது. செவ்வாய் கிழமை அன்று அதிகாலை வேலையிலேயே சுத்த பத்தமாக குளித்து விட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, கிழக்கு பார்த்து அமர்ந்து, இந்த மஞ்சள் பரங்கி காயை முழுசாக எடுத்து, உங்களுடைய மடியில் வைத்துக் கொள்ளுங்கள்.
கந்த சஷ்டி கவசத்தை வாய்விட்டு படியுங்கள். அதன் பிறகு உங்கள் கையில் இருக்கும் பரங்கிக்காய் கொண்டு போய் யாராவது ஒரு ஏழைக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
கோயில் வாசலில் அமர்ந்து இருக்கும் ஏழைகளுக்கு கூட இந்த பரங்கிக்காய் தானமாக கொடுக்கலாம். இதே போல தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகள் கையில் பரங்கிக்காயை வைத்துக்கொண்டு, கந்த சஷ்டி கவசத்தை மனம் உருகி பாடி, பரங்கிக்காய் தானம் கொடுப்பவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் நோய் நொடி பிரச்சனை படிப்படியாக குறையும்.
ஆறு வாரம் முருகப்பெருமானை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து விட்டு, குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும்.
நோய்வாய் பிரச்சினை உள்ளவர்கள் கையிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை, என் கணவருக்கு உடல் நிலை சரியாக வேண்டும், என்று மனைவி அம்மா இப்படி அடுத்தவர்களுக்காக கூட நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பலன் கிடைக்கும்.
சரி இப்படி பரங்கிக்காய் தானம் செய்யும் போது, நம்முடைய நோய் நொடியும் நம்முடைய கர்ம வினையும், தானம் பெறுபவர்களை பாதிக்குமா என்று கேட்டால் நிச்சயம் கிடைக்காது.
நீங்கள் தானமாக கொடுக்கும் பரங்கிக்காயின் மூலம், தானம் பெறுபவர்களுக்கு எந்த கஷ்டமும் வராது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆக மன நிறைவோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.