ஆட்சியே வேண்டாம், மீண்டும் தேர்தலா? விரக்தியில் விஜய் கூறிய விடயம் ; இந்திய ஊடகங்களின் தகவல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி காரணமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் விரக்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரும்பான்மைக்குச் சற்றே குறைவான இடங்களைப் பெற்ற நிலையில், சிறு கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்த விஜய்க்கு நிபந்தனைகள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. "யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை; பதவிக்காக எவர் காலிலும் விழ மாட்டேன்" என விஜய் பேசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிருப்தி
குறிப்பாக, திருமாவளவன் போன்ற தலைவர்களின் நிபந்தனைகள் மற்றும் அவர்கள் ஸ்டாலினின் ஆலோசனையின்படி நடப்பதாக எழுந்துள்ள புகார்கள் விஜய்யை அதிருப்தியின் விளிம்பிற்கே தள்ளியுள்ளது.
"மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அனைவரும் எனக்கு எதிராக அணி திரள்வதை எதிர்பார்க்கவில்லை" என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
ஆட்சி அமைக்கும் முன்பே இத்தனை நெருக்கடிகள் என்றால், பதவி ஏற்ற பிறகு சுதந்திரமாகச் செயல்பட முடியாது என அவர் கருதுகிறார். இதனால், "ஆட்சியே வேண்டாம், மீண்டும் மக்களிடமே சென்று முழு ஆதரவு கேட்போம்" என்ற மனநிலைக்கு விஜய் வந்துள்ளதாகத் தெரிகிறது.
எனினும், அவரது ஆலோசகர்கள் அவரைச் சமாதானப்படுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற அணுகுமுறை, மாற்று அரசியல் வியூகங்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படும் வாய்ப்பு எனப் பல ஆலோசனைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ் . போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் ; பல மில்லியன் பெறுமதியான மருந்துகள் தீக்கிரை
தற்போது விஜய் மௌனம் காப்பதால், தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இது ஒரு புறம் இருக்க விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவனை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.