இவரை கண்டால் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்
அட்டன் ஸ்டெரதன் தோட்டத்தை வசிப்பிடமாகக்கொண்ட பி.மனோகரன் (65) என்பவர் அட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு சந்தர்ப்பங்களில் இவர் இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து செல்லும் போது தடுக்கப்பட்டிருக்கின்றார். கடைசியாக இவர் நீல நிற சட்டையும் நீல நிற சாரமும் அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் காணாமல் போனவரின் மகனின் 077-3399752 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு கேட்கப்பட்டுள்ளது.