உங்க அலுமாரியில் இந்த பொருட்கள் இருந்தா பணம் சேராதம்
பணம், நகை, சொத்து பத்திரங்கள், சான்றிதழ்கள் என்று எல்லாவிதமான முக்கிய ஆவணங்களையும் வைக்கக்கூடிய இந்த பீரோ என்பது மகாலட்சுமியின் அம்சமாக இருக்கிறது.
இதில் சில பொருட்களை வைக்கும் பொழுது குடும்பத்தில் சுபீட்சம் அதிகரிக்கும்.
அது போல சில பொருட்கள் வைக்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய பீரோ இரும்பினால் அல்லாது மரத்தால் ஆனதாக இருந்தால் மிகவும் விசேஷமானதாக கூறப்படுகிறது.
மரத்தால் ஆன அலுமாரி
அதிலும் தேக்கு தேக்கி வைக்க கூடிய அம்சம் என்பதால் தேக்கு மரத்தால் ஆன பீரோ வைத்திருந்தால் பணம் அதிகம் சேரும்.
இப்பொழுது எல்லோருடைய வீட்டிலும் இரும்பு பீரோ இருக்கிறது.
இத்தகைய இரும்பு பீரோவில் இரும்பு பொருட்களை கொண்டு போய் சேர்க்கக்கூடாது.
இது பணவரவை தடை செய்யும் என்று ஆன்மீகம் கூறுகிறது.
பீரோவில் கஜலட்சுமி, மகாலட்சுமி, பெருமாள், விநாயகர் ஆகியோரின் படங்களை வைக்கலாம். இவர்களுக்கு தினமும் கற்பூர ஆரத்தி காண்பிப்பது நல்லது.
பீரோவில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு போய் சிலர் அடுக்கி வைப்பது உண்டு.
எதிர்மறை ஆற்றல்களை உண்டு பண்ண கூடியவை
பயன்படாத பழைய வயர்கள், ஸ்விட்ச் பாக்ஸ், ஹெட்போன்கள், மொபைல் போன்கள், சார்ஜர்கள், போன்றவற்றைக் கூட பீரோவில் அடுக்கி வைப்பது உண்டு.
பீரோவின் கடைசி பகுதியில் துணிமணிகளை அடுக்கி வைக்க முடியாது என்பதால் அந்த இடங்களில் பெரும்பாலும் குப்பைகளை கொண்டு போய் சேர்க்கிறோம்.
இது தரித்திரத்தை உண்டு பண்ண கூடியது.
இதனால் பணம் சேராமல் போகலாம். பொருளாதார வாய்ப்புகள் குறையும் அபாயமும் உண்டு.
அப்புறப்படுத்த வேண்டியவை
ஓடாத கடிகாரங்கள், ஸ்மார்ட் வாட்ச், வாட்ச், ரப்பர் பொருட்கள், கிப்ட் ஐட்டங்கள், பிஞ்சி போன பொம்மைகள், அறுந்த காலணிகள், ஷூக்கள் இவற்றைக் கூட அவ்வப் பொழுது அப்புறப்படுத்தி விடுவது நல்லது.
எவ்வளவு காலமானாலும் இவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாமல் இருக்கும் பட்சத்தில் இவற்றை கொண்டு போய் பீரோவில் வைத்தால் அதில் நெகட்டிவ் வைப்ரேஷன்கள் உருவாகும்.
எந்த இடத்திலும் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும் போது தான் அங்கு இருக்கக்கூடிய பொருட்களுக்கும் நேர்மறையான பலன்கள் இருக்கும்.
பீரோவில் தூசிகளை சேர விடக்கூடாது. கடைசி கீழ்ப்பகுதியில் அதிகம் தூசுகள் அடைந்து கிடக்கும். அந்த இடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அலுமாரிக்குள்ளும் ஆரத்தி காண்பித்தல்
பீரோ முழுவதுமே எப்பொழுதும் வாசனையாக வைத்திருக்க வேண்டும்.
இதற்கு பூஜை செய்யும் பொழுது பீரோவை திறந்து அதற்குள்ளும் தூப, தீப, ஆரத்தி காண்பிக்க வேண்டும்.
சாம்பிராணி புகையை கூட பீரோவிற்குள் காண்பிப்பது உண்டு.
இது போன்ற பூஜை முறைகளை கையாளும் பொழுது அங்கு வைக்கும் பணம் அல்லது நகையாவது மென்மேலும் சேரும்.
குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும். வருமானத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கையாக இன்றளவிலும் இருந்து வருகிறது.