பெண்களிடம் இந்த குணம் இருந்தால் குடும்பத்துக்கு ஆகாதாம்!
ஒரு நல்ல குடும்பமானது கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒற்றுமையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்வது தான்.
அப்படி இல்லாமல் வீட்டில் எப்போதுது பார்த்தாலும் சிடுசிடுவென்று பேசிக் கொண்டு சண்டை, சச்சரவுடன் இருந்தால் அது குடும்பத்தை பாதிப்பதுடன் குழந்தைகளையும் பாதிக்கும். இந்த சண்டை சச்சரவு குழப்பத்திற்கெல்லாம் பெண்கள் மட்டும் தான் காரணமா என்றால் அப்படி அல்ல.
ஆண்களுக்கும் இது போன்று குணங்கள் உண்டு. ஆனால் பெண்களின் குணங்கள் பெரிதாக குடும்பத்தை பாதிக்கும் என்பதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பெண்கள் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
பெண்களுக்கு , ஏற்படும் எரிச்சல், கோபம், விரத்தி இது போன்ற குணங்கள் வாழ்க்கையை சிதைத்து விடுவதுடன் கூட இருப்பவர்களையும் மனக்கஸ்டத்திற்கு உள்ளாக்குகின்றது. இப்படியான குணங்களை எந்த பெண்ணும் தானாக உருவாக்கிக் கொள்வதில்லை சந்தர்ப்பங்கள் அப்படி உருவாக்கி விடுகின்றன.
எந்த விஷயத்தையும் முதலில் பொறுமையாக கையாள வேண்டும். இது போன்ற சமயங்களில் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. இதையெல்லாம் செய்வதுடன் இந்த ஒரு விஷயத்தையும் சேர்த்து செய்து விடுங்கள்.
மாற்ற என்ன செய்யலாம்?
இப்படி எரிச்சல், கோபங்கள் வரும் போது வீட்டில் விளக்கு ஏற்றி விளக்கின் முன் அமர்ந்து சிறிது நேரம் கண்ணை மூடி தியானம் செய்தால் சரியாகும் உங்கல் மனநிலை சரியாகிவிடும். ஆனால் அதை செய்யும் அளவிற்கு அந்த நேரத்தில் மன நிலை இருக்காது.
இப்படியான மனநிலை உங்களுக்கு தோன்றும் போது, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் வெல்லம் கலந்து முடிந்தால் சாமி படத்திற்கு முன் வைத்து இரண்டு நிமிடம் கண்ணை மூடி கடவுளை கும்பிட்டு குடித்து விடலாம். இது நிச்சயமாக உங்கள் மனநிலையை மாற்றி விடும்.
எளிமையான பரிகாரம்
புதன்கிழமை காலையில் குளித்து முடித்து நீங்கள் பூஜை செய்யும் போது இரண்டு ஏலக்காவை வைத்து வணங்கி விடுங்கள். அதன் பிறகு அந்த ஏலக்காவை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள். இப்படி 21 வாரங்கள் செய்ய வேண்டும்.
இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்து இதனால் நம் குடும்பத்தில் பிரச்சனை தீர்ந்து சுமுகமாக வாழ முடியும் என்றால் பெண்கள் இதை செய்வதில் ஒன்றும் எல்லாவற்றுக்கும் ஆதாரமே குடும்பம் தான், அந்த குடும்பத்தை சரியான முறையில் வழி நடத்த இந்த சிறிய பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும்.
நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். வாழ்வில் வளம் பெறலாம்.