முடியாவிட்டால் ராஜினாமா செய்வேன்; அமைச்சர் சூளுரை!
அடுத்த வருடத்திற்குள் இரத்தினக்கல் துறையில் 500 மில்லியன் ரூபாவை ஈட்ட தன்னால் முடியும் எனவும், அவ்வாறு இல்லாவிடின் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இரத்தினக்கற்கள்தொகை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் , அதன் வருமானம் இன்னும் நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் வருடம் இரத்தினக்கற்கள் மூலம் 170 மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.