உங்க நகங்கள் இப்படி இருக்கா? அலட்சியம்வேண்டாம்; காத்திருக்கும் அபாயம்
ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமது விரல் நகங்களிலேயே வெளிக்காட்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நகத்தின் ஏற்படும் மாற்றங்கள் கொலஸ்ட்ரால் அறிகுறிகள்.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியம் தான்.ஆனால் அது அளவுக்கு அதிகமாகும் போது, இரத்தக்குழாய்களில் படித்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி பல ஆபத்தான பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.

நகங்கள் காட்டும் அறிகுறிகள்
இன்றைய காலகட்டத்தில் பெரிவர்களை விட அதிகமாக கொலஸ்ட்ராலால் பாதிக்கபப்டுவது இளையோர்கள் தான். காரணம் அவர்களது உணவு பழக்க வழக்கங்களே.
அவர்களே அதிகம் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றமை அண்மைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருந்தால் நகங்களில் எந்த மாதிரியான மாற்றங்கள் தெரியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நகங்களில் கோடுகள்
உங்களின் நகங்களில் வழக்கத்திற்கு மாறாக கோடுகள் தெரிகிறதா? பொதுவாக நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் கொலஸ்ட்ரால் அல்லது இதயப் பிரச்சனை போன்ற ஒரு தீவிரப் பிரச்சனையால் ஏற்படலாம்.
அதுவும் ஒனிகோரெக்ஸிஸ் என்று அழைக்கப்படும் நகங்களில் ஏற்படும் இந்தக் கோடுகள் ஊட்டச்சத்து குறைபாடுகுள் மற்றும் இரத்த சோகை போன்றவ ஆரோக்கிய பிரச்சனைகளாலும் ஏற்படலாம்.
நிற மாற்றம் அல்லது அடர் நிற கோடுகள்
விரல் நகங்களில் அடர் நிற கோடுகள் அல்லது நகங்கள் நிறம் மாறி காணப்பட்டால், அது இரத்தத்தில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இருக்கலாம். ஏனெனில் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அது இரத்த ஓட்டத்தை பாதித்து, நகங்களில் இப்படியான மாற்றங்களை உண்டாக்குகின்றன.
வளைந்த நகங்கள்
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது நகங்களை பாதிக்கும். முக்கியமாக இது நகங்களின் முனைப்பகுதியை பஞ்சு போல மாற்றி, வளையச் செய்யும். எனவே உங்களின் விரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வளைந்து இருப்பதைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

ஊதா நிற நகங்கள்
உங்கள் விரல் நகங்கள் ஊதா அல்லது நீல நிறத்தில் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கலாம். ஆகவே உங்கள் நகங்கள் திடீரென்று ஊதா நிறத்தில் காணப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
பலவீனமான நகங்கள்
உங்கள் நகங்கள் எளிதில் உடையக்கூடியவாறு உள்ளதா அல்லது மிகவும் பலவீனமாக உள்ளதா? அப்படியானால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
எப்போது ஒருவரது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதோ, அப்போது உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல், நகங்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய், பலவீனமாக மாறும்.

மெதுவான நக வளர்ச்சி
உங்களுக்கு நகங்கள் மிகவும் மெதுவாக வளர்கிறதா? அப்படியானால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக, நகங்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பது தான். எனவே நக வளர்ச்சி குறைவாக இருந்தால், உடனே அதை கவனியுங்கள்.
வெளிரிய நகங்கள்
ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருந்தால், நகங்கள் வெளுத்துப் போய் இருக்கும். வெளிரிய நகங்கள் (சயனோசிஸ் எனப்படும் ஒரு நிலை) அதிக கொலஸ்ட்ரால் காரணமாக தமனிகளில் ஏற்படும் அடைப்புகளால் இரத்த ஓட்டம் குறைந்திருப்பதைக் குறிக்கலாம்.
எனவே இந்த அடையாளங்கள் உங்கள் நகங்கள் வெளிப்படுத்தினால் உடனடியாக மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுங்கள்.