உலக கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் முக்கிய நட்சத்திர வீரர் பங்கேற்பாரா?
எதிர்வரும் 50 ஒவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பங்கேற்பது நிச்சயமற்றதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லங்கா பிரிமீயர் லீக் போட்டியின் போது காலில் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்கவுக்கு ஆசிய கிண்ண போட்டியில் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பயிற்சி தொடங்கிய பின்னர் வனிந்து ஹசரங்க மீண்டும் காயமடைந்துள்ளார்.
மருத்துவ அறிக்கையின்படி அவரால் இந்தியாவில் நடைபெறவுள்ள் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி இன்று (25-09-2023) உத்தியோகபூர்வமாக பெயரிடப்படவுள்ளதுடன், இலங்கை அணி எதிர்வரும் 26ஆம் திகதி இரவு இந்தியா செல்லவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.