ஜேர்மன் திரையரங்குகளில் ‘போராட்டம்’ திரைப்படம்; எங்கெங்கு தெரியுமா?
இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஜெர்மனியிலும் பல நகரங்களில் திரையிடப்படவுள்ளது.
ஜெர்மனியில் பெர்லின், டிரெஸ்டன், எஸ்லிங்கன், லியோன்பெர்க், ஸ்வாபிஷ் க்முண்ட், போகும், கார்ல்ஸ்ரூஹே, பிரேமன், எசன், ஹனோவர், முனிச், ஒஃபென்பாக், ஸ்டுட்கார்ட் மற்றும் வுப்பர்டால் உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில், பாஸ்கரன் கந்தையா வழங்கும் இந்தத் திரைப்படத்தை ராஜ் சிவராஜ் எழுதி இயக்கியுள்ளார். பூவன் மதீசன் இசையமைத்துள்ளதுடன், றீகன் கந்தையா மற்றும் நிவேதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘போராட்டம்’ திரைப்படம் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ஒரு இளைஞனின் கனவு, குடும்பப் பின்னணி, காதல், நட்பு மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.