தேவைப்பட்டால் தியாகம் செய்வேன்; பசில் ராஜபக்ஷ
தேவை ஏற்பட்டால் தனது இரட்டை குடியுரிமையை கைவிடுவேன் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றுடனான நிகழ்ச்சியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொதுமக்களின் நலனுக்காக கோட்டாபய ராஜபக்ச தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரட்டை குடியுரிமையை கைவிடுவேன்
கோட்டாபய ராஜபக்ச மக்களுக்காக தியாகம் செய்ததாகவும், ஆனால் அதன் விளைவாக துன்பங்களை அனுபவித்ததாக அவர் கூறிய நிலையில் “இதேபோன்ற தியாகத்தை நீங்களும் செய்வீர்களா?” என வினவிய போது “அந்த நேரத்தில் தேவை ஏற்பட்டால் எனது இரட்டை குடியுரிமையை கைவிடுவேன். எனினும், தற்போது அவ்வாறான தேவை இல்லை” என்றும் பசில் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி பீதி அடையாமல் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.