நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் ; ரஜீவன் எம்.பி
மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

பதவியை ராஜினாமா செய்கிறேன்.
அந்த பதிவில் மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக எனக்குள்ள அதிகாரத்தையும் தாண்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சொல்லி பல அரச அதிகாரிகளை கெஞ்சிக் கேட்டேன்.
பலர் உதவினார்கள். சிலர் உதவவே இல்லை. அதனை மன்னிக்க முடியாது. அப்படியானவர்கள் தங்கள் பதவியை உறுதிப்படுத்த பாடுபட்டார்களே தவிர மக்களுக்கு உதவவில்லை.
உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை வழங்குவேன். மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
எனக்கு உதவ ஆயிரம் வழிகள் உண்டு. அதே போன்று அதிகாரம் உள்ள யாரும் மக்களுக்கு நல்லது செய்ய பின் நிற்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.