நான் நிரபராதி ; அடம்பிடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்
ஆபாச நடிகையால் வழக்கில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்மீது 34 குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தான் ஒரு நிரபராதி என நியூயோர்க் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
ட்ரம்பிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே இவ்வாறு தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் ஜனாதிபதி
2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பண பரிமாற்றத்தில் விதிகள் மீறப்பட்டதாக தெரிவித்து ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆபாசமான திரைப்பட நட்சத்திரத்திற்கு பணம் கொடுத்ததாக டொனால்ட் ட்ரம்ப் மீது இந்த கிரிமினல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் 76 வயதான ட்ரம்ப், கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாகக் கருதப்படுகிறார்.
மேலும் டிரம்ப் மீதான இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.