சென்னையில் பயங்கரம்; கடன் தொல்லையால் மருத்துவர், மனைவி இரு பிள்ளைகள் தற்கொலை
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில், மனைவி, மனைவி பதின்மவயது இரு பிள்ளைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கணவர் மருத்துவர், மனைவி வக்கீல்
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி சுமதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருக்கின்றனர்.
மருத்துவர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குடும்பத்தினர் 4 பேரும் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.