வெளிநாட்டிலிருந்து வந்து மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!
மட்டக்களப்பில் களவாஞ்சிக்குடி பகுதியில் குடும்ப பிரச்சினையால் கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மனைவியை வைத்தியசாலையில் கொண்டு செல்லும் சந்தரப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவத்தில் சந்தேக நபரான பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு குறித்த சந்தேகநபர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் இருந்த போதே மனைவியை கொலை செய்வதாக எச்சரித்ததாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலை சம்பவம் தொடர்பில் களவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.