மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனால் பரபரப்பு
பல்லமவில் கணவன் ஒருவர் தனது மனைவியை ஏர் ரைபிள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பல்லம ரம்பத்தலாவத்த, அடிகம பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (13) இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
காயமடைந்த பெண் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.