மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு; சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்
மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேத்தால் கணவன், இரண்டு பிள்ளைகளின் தாயின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் புத்தளத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தவிக்கும் பிள்ளைகள்
சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பிள்ளைகளின் தாய், சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் திலடியா பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஜமால்தீன் பாத்திமா சபுனா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மனைவி எரிந்துகொண்டிருந்த போது அதனை அணைக்கச் சென்ற கணவனுக்கும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவன் உடலுக்கு தீ வைத்ததையடுத்து, அயலவர்கள் இணைந்து உடனடியாக அவரை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.