மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் இரண்டு நாட்கள் தலைமறைவான நிலையில் சடலமாக மீட்பு
மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் இரண்டு நாட்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் 47 வயதான ரத்னாயக்க முதியன்சலாகே, ஆரியப்பால பஸ்நாயக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் மற்றும் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
கம்பளை கொஸ்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இவரது மனைவி கடந்த 28ஆம் திகதி தனது 12 வயது மகனையும் 17 வயது மகளையும் பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது தனது மகளின் பாடசாலைக்கு அருகில் மனைவியை கத்தியால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மனைவி
தாக்குதலுக்கு உள்ளான மனைவி கழுத்தில் மூன்று கத்திக்குத்து காயங்கள் மற்றும் பத்து வெட்டுக்களுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்தோடு அக் கணவர் அவரது வீட்டின் அருகே உள்ள ஒரு புதரில் பதுங்கியிருப்பதை கிராம மக்கள் பார்த்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந் நபர் கத்தியால் குத்தப்பட்டு ஓடும்போது விஷம் குடித்ததைக் கண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் விஷப் போத்தலைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையை கண்டி பொது வைத்தியசாலையில் நேற்று (3) மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கம்பளை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.