மனைவியுடன் தவறான தொடர்பு; வீட்டுக்கு வந்த கணவனுக்கு காத்திருந்த ஷாக்!
மகாஓயா பொலிஸ் பிரிவில் , தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் மகா ஓயாவின் பொரபொல பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை மல்வத்த முகாமில் பணியாற்றும் (21) இராணுவ வீரர் ஆவார்.

ஆத்திரமடைந்த கணவன்
மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றும் (24) இராணுவ வீரர் ஒருவர் கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர், சந்தேக நபரான இராணுவ வீரரின் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாகவும், தான் வீட்டில் இல்லாத போது சந்தேக நபரின் மனைவியுடன் அறையில் இருந்த போது வீட்டுக்கு கணவன் வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த கணவன் அப்போது இருந்த ஒரு கத்தியால் இராணுவ வீரரை வெட்டிக் கொன்றுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது