மனைவியை கொன்று உடலை சூட்கேசில் மறைத்து வைத்த கணவர்
மனைவியை கொன்று, உடலை துண்டு சூட்கேசில் வைத்து, மாமியார் வீட்டுக்கு தகவல் கொடுத்துவிட்டு தப்பியோடிய கணவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திரா, மற்றும் இவரது மனைவி கவுரி அனில் சாம்பேகர், இவர்கள் ஓராண்டுக்கு முன், பணி நிமித்தமாக பெங்களூரு வந்துள்ளனர்.
கருத்து வேறுபாடு
சமீப நாட்களாக இருவரும் வீட்டில் இருந்து பணி செய்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பொறுமை இழந்த கணவர் ராகேஷ் ராஜேந்திரா, கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார்.
பின் உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வெளியே கொண்டு சென்று, எங்காவது வீச நினைத்துள்ளார். அவரால் கொண்டு செல்ல முடியாத நிலையில் மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு, நடந்ததை கூறிவிட்டு தப்பியோடியுள்ளார்.
பீதியடைந்த கவுரியின் பெற்றோர் பெங்களூர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் ராகேஷின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்திய போது, சூட்கேசில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தப்பியோடிய ராகேஷை பொலிஸார் தேடி வருகின்றனர்.