குடும்ப சண்டையில் உயிரை மாய்த்த கணவன்; மனைவி மருத்துவமனையில்
தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை, இந்திபெத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 56 வயதுடைய கணவனே உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு
உயிரிழந்த கணவன் நேற்று (22) மதியம் வீட்டில் வைத்து தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திவிட்டு பின்னர் தனது உயிரை மாய்ததுக்கொண்டுள்ளார்.
காயமடைந்த மனைவி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசமயம் உயிரிழந்த கணவன் இதற்கு முன்னரும், அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயல் வீட்டில் வசிக்கும் நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.