தகாத உறவிலிருந்தவருடன் உல்லாசம் ; இறுதியில் கணவன் அரங்கேற்றிய கொடூரம் ; சாக்குபையில் காத்திருந்த ஷாக்
தகாத தொடர்பை கைவிடாமல் என்னை அவமானப்படுத்தியதால் மனைவியை கையை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 48 வயதுடைய கார் சாரதிமற்றும் அவரது மனைவி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனலட்சுமியை காணவில்லை என விஜயகுமார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

வீட்டில் துர்நாற்றம்
மேலும் வீட்டில் துர்நாற்றம் வந்ததால் பொலிஸார் வீட்டில் சோதனை செய்தபோது வீட்டு சமையலறை பரணில் மனைவி அரிசி சாக்குபையில் கட்டி, 2 கைகளின் மணிக்கட்டுக ளின் நரம்புகள் அரிவாளால் அறுக்கப்பட்டு, கால்கள் இரண்டும் செல்போன் சார்ஜர் ஒயரால் கட்டப்பட்டு முகம் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
பின்னர் பொலிஸார் குறித்த ஆணை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மனைவிக்கு 25 வயது வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி அவரை சந்தித்து பேசி வந்தார்.
வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு 3 நாளைக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவாள். கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியபோது, என்னிடம் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்ததாக கூறியுள்ளார்.
அன்றிரவு குறித்த பெண் தாமதமாக வீட்டிற்க்கு வந்துள்ளதுடன் இது தொடர்பில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.அத்துடன் தான் தவறான உறவிலிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கணவன் 2 கைகளை பிடித்து அரிவாளால் மணிக்கட்டில் வெட்டியுள்ளதுடன் கால்களை செல்போன் சார்ஜர் வயரால் கட்டியுள்ளதுடன், முகத்தை டவல் மற்றும் துணியால் இறுக கட்டி நள்ளிரவு தூக்கி பரணில் போட்டுவிட்டு அதன்மேல் பழைய பொருட்கள், ஸ்பீக்கர் பாக்ஸ், கயிறு போன்றவற்றை வைத்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து கணவர் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவர்களது 3 குழந்தைகளின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.