வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்களால் பரபரப்பு!
வவுனியா பகுதியில் உயிரிழந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே இவ் மனித எச்சங்கள் இன்றைய தினம் (13-02-2023) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 9 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்து காணாமல்போன ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மனித எச்சங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இது காணமால் போனவரின் உடல் அங்கங்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.