நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற பிரபல நடிகர்: கூச்சலிட்ட ரசிகர்கள்! வைரல் வீடியோ
இந்தி சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan).இவர் இறுதியாக புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தை இந்தியில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருந்தது.
இதனையடுத்து தற்போது ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனேவுடன் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகின்றார்.
ஃபைட்டர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் இந்தியாவின் முதல் ஏரியல் ஆக்சன் திரைப்படம் என்ற வாசகத்துடன் வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்தினை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேஸ்பூர் நகரில் நடைபெற்று வருகிறது.
அங்குள்ள விமானப்படை தளத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கலந்து கொண்டுள்ளார்.
‘Wish me luck’ : Hrithik ❤️
— HrithikRules.com (@HrithikRules) November 17, 2022
Credits: Gauri + DY365 #HrithikRoshan #Fighter pic.twitter.com/1v6UOfHKTq
இவ்வாறான நிலையில் தேஸ்பூர் நகரில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடந்து செல்லும் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.
அப்போது அவர்களை நோக்கி கை அசைத்த ஹிருத்திக் ரோஷன், "நான் தான் மிகுந்த அதிர்ஷ்டசாலி" என ரசிகர்களை நோக்கி பேசி சென்றார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.