புலிகளின் காலத்தில் எப்படி சாத்தியமானது? கடற்படை பேச்சாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்!
விடுதலை புலிகளின் காலத்தில் வடகிழக்கு ஊடாக போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்றும், ஆனால் அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது தமக்கு தொியவில்லை எனவும், கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
விடுதலை புலிகள் காலத்தில் வடகிழக்கில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அது எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தொியவில்லை என குறிப்பிட்டார்.
அதோடு ஒருவேளை போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வெளிநாட்டு படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய முடியாது போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெறாமைக்கு அதுவும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வடகிழக்கு ஊடாக போதைப்பொருள் கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறும் நிலையில் அதிகளவான கடத்தல்களை கடற்படையினர் முறியடிப்பது அவர்களின் பலவீனம் அல்ல என தெரிவித்த இந்திக்க டி சில்வா, அது கடற்படையினரின் செயற்பாடுகள் துரிதமாகி வருவதை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.