இரு தடுப்பூசிகளை பெற்றும் மங்கள மரணமடைந்தது எப்படி? வெளியான தகவல்
கொரோனா தொற்றில் நேற்று உயிரிழந்த இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, பைஸர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தவர் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியிருக்கின்றது.
அவர் நிமோனியா காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் குணமடைந்துவந்தார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது உடல்நிலை மோசமான கட்டத்தில்தான் இருந்துள்ளது. இந்நிலையில் சாதாரண நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று திடீரென அவர் மரணமடைந்தார்.
கொவிட், நிமோனியா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முன்னாள் அமைச்சர் சமரவீர நீண்டகாலமாக நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.