யாழில் வீட்டுப் பணிபெண் செய்த தலைசுற்ற வைக்கும் செயல் ; மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சி
யாழ். நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட எட்டரை பவுண் தங்க நகைகள் யாழ். குற்றத் தடுப்புப் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்றையதினம் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் பணி நிமித்தம் பகலில் வீட்டில் இருப்பதில்லை. அதனால் வீட்டைப் பராமரிப்பதற்கென பணிப்பெண் ஒருவரை வேதனத்துக்கு அமர்த்தினர்.

14 பவுண் நகை
இந்தநிலையில், அவர்கள் வீட்டில் இருந்த 14 பவுண் நகைகளைக் காணாமல் போனது.
இதனால் அந்த நகைகள் களவாடப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை துரிதகதியில் முன்னெடுத்த பொலிஸார், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 53 வயதான பெண்ணைக் கைது செய்தனர்.
இதன்போது அவரிடமிருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டன.