திருமணம் செய்யும் தம்பதியினருக்கு வீடு; அமைச்சர் தெரிவிப்பு!
எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வீடமைப்பு பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வீடுகள் இல்லாத காரணத்தினால் தள்ளிப்போகும் திருமணங்கள்
வீடுகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்வது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவ்வாறான ஓர் நிலைமை இனி நீடிப்பதற்கு இமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு 24 முதல் 30 வயதுக்குள் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அதுவே சரியான வயது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு வீடு ஒன்றை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையை எட்டும் வரையில் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வீடமைப்பு பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.