இலங்கையில் ஜேர்மன் பெண்ணுக்கு விடுதி ஊழியரால் நேர்ந்த கொடூரம்!
காலியில் ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட தொடர்பில், அதன் ஊழியரான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி - ஹபராதுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் உள்ள உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்றிருந்த பெண்ணே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட 65 வயதான சுற்றுலாப் பயணி ஹபராதுவ காவல் நிலையத்துக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உடற்பிடிப்பின்போது, சந்தேகநபரான ஊழியர் தவறாக நடத்துக்கொண்டதாக பெண் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான விடுதி ஊழியர், இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
அவர் இன்று காலி நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹபராதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.