தமிழர் பகுதியில் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைகள்; வெளியான பதைபதைக்கும் காட்சிகள்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். எரிபொருள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனினும் தற்போது எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வைத்திய சாலைகள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. அந்தவகையில் எரிபொருள் கோரி முல்லைத்தீவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எரிபொருள் இல்லாமையால் நோயாளிகளை இடம்மாற்றுவதற்கு வாகனங்கங்களுக்கு எரிபொருள் இன்மையால் நோயாளிகள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சிவமோகன் , மாட்டு வண்டியில் நோயாளியை அழைத்துச்செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்சிசன் சிலிண்டருடன் குறித்த நோயாளியை மருத்துவர் சிவமோகன் மாட்டு வண்டியில் அழைத்து ச் செல்லும் காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்க வைத்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை இடம்பெற்ற இப்பேரணியில் நோயாளருடன் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினரான மருத்துவர் சி. சிவமோகன் மாட்டு வண்டிலில் பயணித்தார். அத்துடன் இந்த பேரணியில் இதன்போது எரிபொருளற்ற அம்புலன்ஸ் வண்டியும் இழுத்துச் செல்லப்பட்டது.



