தமிழர்களின் விருந்தோம்பல்; தமிழ்பேசும் சீனப்பெண் நெகிழ்ச்சி! (Video)
ஐரோப்பிய வாழ் ஈழத்து புலம்பெயர் தமிழர்களின் பண்புகள் தொடர்பில் சீன பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி வியப்பை வெளியிட்டுள்ளார்.
அதோடு தமிழர்களின் உற்சாகம் மற்றும் விருந்தோம்பல் தனக்கு தமிழ் கற்பதில் மிகப்பெரிய ஊக்கம் அளித்துள்ளதாக சீன பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி தெரிவித்துள்ளார்.
தமிழை கற்பதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது
நான் 4 ஆண்டுகளாக தமிழ் மொழியினை கற்கின்றேன். 247 எழுத்துக்களை கொண்ட தமிழ் மொழியினை முதலில் கற்கும் போது சற்று தயக்கம் இருந்தது. ஆனால் தமிழை கற்க ஆரம்பித்து செல்ல செல்ல கலாசாரத்தின் பற்றினால் தமிழை கற்பதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என்றும் சீன பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களாக இருந்து தமிழ் பேசுவதை தவிர்க்கும் சிலருக்கு மத்தியில், சீன பெண்ணாக இருந்து, தமிழ் மொழியை ஆர்வமாக கற்று தமிழ் மொழியை பேசுவதை இன்பமாக கருத்தும் சீன பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி, பலரையும் வியக்க வைத்துள்ளார்.