இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கென சிறப்பு நடவடிக்கை!
நாட்டின் ஆரோக்கிய கிராம யோசனைக்காக பியகம வைத்தியசாலையுடன் இணைந்து புதிய வைத்தியசாலையை உருவாக்குவது தொடர்பான காணி சுவீகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardene) தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் இன்று (27-10-2022) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கருத்தின்படி, இலங்கையில் முதன்முறையாக ஆரோக்கிய கிராமம் என்ற கருத்து அமுல்படுத்தப்படுவதுடன், மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் இலக்காகும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு சர்வதேச தரத்திலான சகல வசதிகளையும் கொண்ட சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக இதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இக்கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையின் திட்டங்களை அவதானித்த ருவான் விஜயவர்தன, காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பைகம பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன சம்பத், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பு செயலாளர் கே.பி.தயாரத்ன, ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் ராஜித அபேகுணசேகர, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சந்திரரத்ன பல்லேகம, பியகம பிராந்திய செயலாளர் சந்திம சூரியதாராச்சி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.