இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; வீதியில் குற்றுயிராக கிடந்த நபர்!
குழு ஒன்றினால் கடத்தப்பட்டு பின்னர் சுட்டும், வெட்டியும் காயமடைந்த நிலையில் வீதியில் குற்றுயிராக கிடந்த நபர் ஒருவர் பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடுவலை - வெலிப்பில்லவில் இன்று (26) அதிகாலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவகையில்,
கடத்தப்பட்டு கூரிய ஆயுதங்களால் தாக்குதல்
பூ பறிக்க வந்த நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதை கண்டு அவரின் அருகில் சென்று பார்த்து அவருடன் பேசியபோது, தான் கடவத்தை பகுதியை சேர்ந்தவர் எனவும் குழு ஒன்றினால் தான் கடத்தப்பட்டு கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு பின்னர் தன்னைச் சுட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பூ பறிக்க வந்த நபர் 1990 அம்யியூலன்ஸுக்கு தகவல் வழங்கி வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடுவல பொலிஸார் தெரிவித்தனர்.