தென்னிலங்கையில் பயங்கரம்; இளம் தம்பதி வெட்டிகொலை
ஹூங்கம வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹூங்கம, ரன்ன, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
எவ்வாறாயினும் தம்பதியினர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று (7) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.