21 வயது இளைஞரின் உயிரை பறித்த கோர விபத்து ; ஒருவர் படுகாயம்
கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தின்போது மோட்டார் சைக்கிள் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த பாலத்தின் பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணை
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மற்றும் அதன் பின் இருக்கையில் பயணித்தவர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் உடனடியாக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.