கிளிநொச்சியில் இரு இளைஞர்களை பலிகொண்ட கோர விபத்து
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர் (Motor Grader) வாகனத்துடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள்
உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.