கார்த்திகை மாதத்திற்கான ராசிபலன்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை
கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம், கணிப்புகளின் துணை கொண்டு, நமது வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படலாம். அப்போது நமது வாழ்க்கை சுமூகமாக செல்லும்..
கார்த்திகை மாதத்திற்க்கான ராசிப்பலன்கள்:
இந்த மாதம், 12 ராசிகளுக்குமான ராசிபலன்களில் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிகளுக்கான பலன்கள் இதோ..
துலாம்: துலாம் ராசிக்காரர்களே புதிய வணிகத்தில் நுழைய விரும்பினால், அதை சற்று தள்ளிப்போடவும் மன இறுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, இது உங்கள் உறவைப் பாதிக்கலாம். சூரியனின் இந்த மாற்றத்தில் வருமானம் நன்றாக இருந்தாலும் செலவும் அதிகரிக்கும்.
விருச்சிகம்: விருச்சக ராசிக்காரர்களே உத்தியோகத்தில் ஆதாயங்கள் கிடைக்கும். சூரியனின் தற்போதைய சஞ்சாரம், உடல் நிலை பாதிப்பு ஏற்படுத்தலாம். எனவே, உங்கள் ஆரோக்கியத்தை சரியான முறையில் கவனித்துக்கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது நல்லது. உறவினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களே நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். காய்ச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் வரக்கூடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். வழக்கத்தை விட அதிக செலவாகும் காலம் இது. தொழில் மற்றும் பணியில் எந்த பிரச்சனையும் இருக்காது. தன்னம்பிக்கை குறையலாம்.
மகரம்: சூரியனின் இந்த சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும், நண்பர்கள் மத்தியில் ஈர்ப்பின் மையமாக இருப்பீர்கள்.
நீங்கள் கவனம் மற்றும் உறுதியுடன் இருப்பீர்கள், விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையும் இந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் கல்வித் துறையில் வெற்றி பெறுவார்கள்.
கும்பம்: சூரியனின் இந்த ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் அல்லது வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல நேரம் இது. உங்கள் சக ஊழியர்களும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்கள் வேலையிலும் உங்கள் முயற்சிகளிலும் முழுமையாக ஒத்துழைப்பார்கள்.
இதன் காரணமாக, பணியிடத்தில் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் பிறருடனான உறவு மேம்படும்.
மீனம்: சூரியனின் இந்த சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பைக் கொடுக்கும். விதி உங்கள் பக்கத்தில் இல்லை என்று உணரும் அளவுக்கு அழுத்தமான தருணங்களை சந்திக்க நேரிடலாம்.
வேலை சம்பந்தமாக சில மன அழுத்தத்தையும் பயணத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும், உங்களின் பரோபகார குணத்தால் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.