விடுமுறைக்காக அலுவலகத்தில் நடந்த பரபரப்பு ; சக ஊழியர்கள் மீது கத்தி குத்து
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் விடுமுறை வழங்க மறுத்ததற்கு ஆத்திரமடைந்த அரசு ஊழியர் ஒருவர், தனது அலுவலகத்தில் சக ஊழியர்கள் நால்வரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றி வந்த அமித் குமார் என்பவர், இன்று காலை விடுமுறை கோரியபோது, அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
விவாதம் தீவிரமடைந்த நிலையில், அவரது கோரிக்கையை நிராகரித்த சக ஊழியர்கள் மீது கத்தியை பிரயோகித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த நால்வரும் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்குப் பின்னர் தப்பியோட முயன்ற அமித் குமாரை, பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அலுவலக வளாகங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.