மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்துங்கள்: ஜெஹான் பரிந்துரை!
மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி சிறுபான்மை மக்களுக்கு தங்கள் பிரதேசத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கவேண்டும் என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா (Jehan Perera) தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால் சிறுபான்மை மக்கள் எமது நாட்டின் ஆட்சியில் எந்த பங்குதாரர்களும் அல்ல என்ற நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணைக்குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கை எடுத்தல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமா்வு ஆணைக்குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதியரசருமான துலிப் நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில்  கலந்துகொண்டு இன நல்லிணகத்துக்கு தனது பரிந்துரைகளை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா (Jehan Perera) இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        