மட்டக்களப்பில் வரலாற்று சாதனை படைத்த பட்டிருப்பு தேசிய பாடசாலை!
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்/பட்/ பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை - களுவாஞ்சிக்குடி சிறந்த பெறுபேறுகளை தனதாக்கி வரலாற்று சாதனை நிலைநாட்டி உள்ளது.
மாணவன் தம்பிப்பிள்ளை தினோஜன் விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய ரீதியில் 8 ஆம் இடத்தினையும் பெற்று வைத்திய துறைக்கு தெரிவாகி பாடசாலைக்கு வரலாற்று பெருமை சேர்த்துள்ளார்.

மகிழூர் கண்ணகி புரம் கிராமத்திலிருந்து வைத்தியதுறைக்கு சூப்பர் மெரீட் எனும் தரத்துடன் தெரிவாகும் முதலாவது மாணவன் இவர்.
மாணவன் தினோஜனின் சாதனையை பாடசாலை அதிபர், பிரதி, உப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரது வீட்டிற்கு சமூகம் கொடுத்து பாராட்டியதுடன். சுகாதார நெறிமுறைகளைப் பேணி பாடசாலையில் வைத்து பொன்னாடை போர்த்தி கௌரவமும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


