இன்று கிருஷ்ண ஜெயந்தி ; மனதார நினைப்போருக்கு உளமார அருளுவான் கண்ணன்!
இந்து மத நூல்களின் சந்திர நாட்காட்டியில் அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். மும்மூர்த்திகளில் ஒருவரான மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும்.
கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் நடுப்பகுதிக்கும் செப்டம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
மனதார வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்
இந்த நாளில் மனதார கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். ஜென்மாஷ்டமி நாளில் காலை முதல் நள்ளிரவு வரை விரதம் இருக்க வேண்டுமாம். விரதம் தொடங்கிய நிமிடம் முதல் கிருஷ்ணர் நாமத்தை ஜெபிக்க வேண்டுமாம்.
கோயிலுக்கு சென்று கிருஷ்ணரை வணங்கிவிட்டு அபிஷேகம் செய்ய வேண்டுமாம். முதலில் மூல முதற்கடவுளான விநாயகரை போற்றி வழிபாட்டை துவங்க வேண்டும்.
ஜென்மாஷ்டமி விரதத்திற்கு தேவையான பொருட்கள்: பூக்கள், அடப் அரிசி, பழங்கள், மலர்கள், துளசி இலைகள், பத்தி, சாம்பிராணி, தீபம், பஞ்சகவ்யா, பஞ்சகுரி, சணல், மணல், பஞ்சவர்ண பொடி, தேன்பாத்திரம், திராட்சை. கிருஷ்ணரின் படத்தை வைத்து நன்றாக குளிக்க வைத்து விடவும்.
பிறகு அவற்றை அலங்கரித்து தட்டில் இனிப்புகள், பழங்கள் மற்றும் கிருஷ்ணருக்கு பிடித்த உணவு பொருட்களை சமர்பித்து வணங்க வேண்டும். கட்டாயம் கிருஷ்ணருக்கு பிடித்த உணவு பட்டியலான வெண்ணெய் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தொடர்ந்து வீட்டில் கிருஷ்ணர் பாதம் வரைந்து அவரை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.
அதன் பிறகு மனம் அமைதியாக இருக்க சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். விளக்கை ஏற்றி கிருஷ்ணரின் நாமத்தை ஜெபித்துவழிபட வேண்டும்.