மறைத்துவைக்கப்ட்ட மர்ம பொருள் மீட்பு: மன்னாரில் பரபரப்பு சம்பவம்!
மன்னார் - தாரபுரம் பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் மர்மமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது தாரபுரம் பகுதியில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடி ரூபாய் ஆகும். குறித்த போதை மாத்திரை கடத்தலுடன் தொடர்புபட்டதாக தாராபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் போதைப் பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.