மறைக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்வுகள்...நமீதாவுக்கு நடந்தது என்ன?
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அதில் ஒருவராக முதல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் நமீதா மாரிமுத்து. தற்போது இவர் உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் தாற்போது வெளியேறவுள்ளதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் எப்பவும் சனிக்கிழமை கமல் ஹசன் அவர்கள் மேடைக்கு வந்தவுடன் முந்தைய தினமான வெள்ளியன்று நிகழ்ந்த நிகழ்வுகளை போட்டு காண்பிப்பார்.
ஆனால் நேற்றைய தினத்தில் வெள்ளிக்கிழமையில் நிகழ்வுகள் குறித்து எதுவும் ஒளிபரப்படவில்லை. இதனால் வெள்ளியன்று நமீதா அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என தெளிவாக தெரியவில்லை.
இதன் காரணமாக நமீதா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வெளியேறினாரா அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியே அவரை வெளியேற்றியது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.