ஊரடங்கு நீக்கம்; பொதுமக்களுக்கான புதிய அறிவிப்பு இதோ!
இலங்கையில் நாளையதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் நாளை முதல் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன .
அதற்கமைய அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை அனுமதி வழங்கப்படமாட்டாது என புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள், விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொது போக்குவரத்து சேவைகளின் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமெனவும் பஸ்களில் யன்னல்களை திறந்து செல்லவேண்டியது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தனிமனித இடைவெளி பேணுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் உள்ளிட்ட பல விடயங்களும் புதிய அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
