எரிபொருட்களின் புதிய விலைகள் இதோ!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நேற்று நள்ளிரவு முதல் அதன் விநியோக நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி சிபெட்கோவின் புதிய விலைகள்,
பெற்றோல் (92) - ரூ.77 - புதிய விலை ரூ.254,
பெற்றோல் (95) - ரூ.76 - புதிய விலை ரூ.283,
ஓட்டோ டீசல் - ரூ.55 - புதிய விலை ரூ.176,
சூப்பர் டீசல் - ரூ.95 - புதிய விலை ரூ.254,
லங்கா இந்தியன் ஒயிலின் விலை அதிகரிப்புக்குப் பின் புதிய விலைகள்,
யூரோ 03 பெற்றோல் - ரூ.263,
ஒக்டேன் 95 பெற்றோல் - ரூ.283,
ஓட்டோ டீசல் - ரூ.214, சூப்பர் டீசல் - ரூ.249,
இதன்படி, சிபெட்கோ விற்பனை நிலையங்களில் டீசல் விலை குறைவாக இருக்கும் எனினும் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருவதால் 128 ரூபாவினால் விலையை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.