கையில் மருதானி வைத்தவர்கள் இதனை செய்ய கூடாதாம்
பெண்களுக்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் தான் மருதாணி.அதிலும் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கையில் இந்த மருதாணியை வைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மை தரக்கூடிய விஷயமாக கூறப்படுகிறது.
காரணம் அந்த நேரத்தில் பெண்களுக்கு இருக்கும் உடல் சூடு குறையும் என்று அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
இது தவிர கையில் மருதாணியை வைத்துக் கொண்டால் நமக்கு சுக்கிர யோகம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
அத்தோடு பெண்கள் மருதாணியை கையில் வைத்த பின்பு சில விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது என்று முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.
மருதாணி வைத்திருக்கும் பெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் செய்யக்கூடாது?
மருதாணி கையில் வைத்திருக்கக் கூடிய பெண்கள் மகாலட்சுமிக்கு சமமான பெண்கள்.
நீங்கள் உங்களுடைய கையால் எந்த ஒரு அமங்கலமான காரியத்தையும் செய்யவே கூடாது.
மருதாணி வைத்த கையை நீட்டி அடுத்தவர்களை புறம் பேசக்கூடாது. கோள் சொல்லக்கூடாது. தேவை இல்லாமல் மூன்றாவது மனிதர்களை பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது. மருதாணி கையில் வைத்திருக்கக் கூடிய பெண்கள் அடுத்தவர்களைப் பற்றி தவறான வார்த்தைகளை பேசவே கூடாது.
மருதாணி வைத்திருக்கும் கையால் வயதில் சிறிய பிள்ளைகளை கூட அடிக்க கூடாது. குறிப்பாக வயதில் மூத்தவர்களை கை கூட ஓங்கக்கூடாது.
வீட்டில் மங்களகரமான பொருட்கள் உங்களுடைய கையால் உடைய கூடாது. மருதாணி வைத்திருக்கும் பெண்கள் அதிகப்படியாக கோபப்படக்கூடாது. தன்னடக்கம் இல்லாமல் கோபப்பட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை அந்த கையால் தூக்கி போட்டு உடைக்க கூடாது.
பொதுவாக நிறைய அழுக்கு படிந்த கிழிந்த துணி வீட்டில் இருந்தால் தரித்திரம் என்று சொல்லுவார்கள் அல்லவா.
அந்த துணிகளை எல்லாம் மருதாணி வைத்த கையால் தூக்கி வெளியில் குப்பையில் போடக்கூடாது. அப்படிப்பட்ட துணிகளை எல்லாம் மருதாணி வைத்திருக்கும் போது உங்கள் கையால் கிழிக்காதீங்க.
மருதாணியை கையில் இட்டுக் கொள்வதன் அர்த்தம்
மருதாணியை கையில் இட்டுக் கொண்டால் சுக்கிரன் வந்து கையில் வாசம் செய்வதாக அர்த்தம்.
அந்த சமயத்தில் உங்களுடைய கையால் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருட்களை அடுத்தவர்களுக்கு இரவலாக கொடுக்கக் கூடாது.
கொடுக்க கூடாத பொருட்கள்
உதாரணத்திற்கு பால்,, தயிர், உப்பு, புளி, வர மிளகாய், தானியம், அரிசி பருப்பு இவை எல்லாமே லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள் தான்.
இந்த பொருட்களை எல்லாம் கையால் அடுத்தவர்களுக்கு இரவல் கொடுக்கக் கூடாது. மருதாணி இட்ட கையால் தான தர்ம காரியத்தை செய்யலாம்.
இன்றைக்கு கையில் மருதாணி வைக்கறீங்க.ஐந்து நாட்கள் கையில் மருதாணி நிறம் ஒட்டி இருக்கும். அந்த ஐந்து நாட்களுக்கு அந்த மகாலட்சுமியின் ஸ்ரூபமாக நடந்து கொள்ள வேண்டும்.
முன்கோபடாமல் பொறுப்போடு தாயாரின் அமைதி உங்களுடைய முகத்திலும் தெரிய வேண்டும். பிறகு பாருங்கள்.
கையில் லட்சுமி கடாட்சம் எப்படி தாண்டவம் ஆடுகிறது என்று. அந்த மகாலட்சுமியாக மாறிவிடுவீர்கள்.