மஸ்கெலியாவில் வெள்ளத்தில் மூழ்கிய சாமிமலை ஆத்தாடி பிள்ளையார் கோயில்!
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகின்றது.
இதேவேளை, சாமிமலை பெயர்லோன் தோட்ட வனப் பகுதியில் பெய்யும் கன மழை காரணமாக சாமிமலை ஆத்தாடி பிள்ளையார் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.
குறித்த கன மழை இன்று (16-03-2023) மதியம் 3 மணி தொடக்கம் பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சாமிமலை ஆத்தாடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்த பூஜை பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
தொடர்ந்து பெய்த கன மழையால் சாமிமலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக லயின் குடியிருப்புகள் உள்ளே வெள்ள நீர் சென்ற நிலையில் அங்கு அதனால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு நாட்களாக மாலை வேளையில் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்து வருவதால் நீர் தேக்க பகுதிக்கு நீர் வரத்து சற்று அதிகமாக உள்ளது.
