கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பு!
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
இதன் காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், வான் கதவுகள் வழியாக நீர் வெளியேறத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் நீர்த்தேக்கங்களுக்கு கிடைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், அவற்றின் நீர்மட்டமும் தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது.
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வெளியேறுவதால், அதன் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மழை தொடரும் பட்சத்தில் மத்திய மலைநாட்டின் ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரிக்கக்கூடும் என்பதால், நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.