வெளிநாடொன்றில் வரலாறு காணாத கனமழை: 8 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அவசர எச்சரிக்கை
மழை வெள்ளம் காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆபத்தின் அளவை உணர்த்தும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது நிலை 4 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் தொடர்ந்து நிலவுவதாகப் பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.