யாழ்.மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!
யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம்வரை அதிகூடிய மழைவீழ்ச்சியாக 64 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலக அனர்த்து முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்.சூரிய ராஜா தெரிவித்தார்.
நேற்று காலை தொடக்கம் மாலை வரை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சியில் அதிகப்படியாக சாவகச்சேரி பகுதியில் 20.4 மிமீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக நெடுந்தீவுப்பகுதியில்17 மிமீ மழைவீழ்ச்சியும் வடமராட்சி அம்மன் பகுதியில் 15.8 மிமீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் யாழில் இன்றைய தினம் மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக 2 மாவட்டங்களில் 269 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 45 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் தொடர்ந்து காணப்படுவதால், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான காலநிலை நிலவுகிறது.